யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 9 June 2022

யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கியது பூந்தமல்லி நீதிமன்றம்.

பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயிலின் உப கோயில்களில் உள்ள பழுதான சிலைகளை புனரமைப்பதாக கூறி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் (33) என்ற யூடியூபர், சமூக வலைதளம் மூலம் பொதுமக்களிடம் நிதி திரட்டியதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக மதுர காளியம்மன் கோயில் நிர்வாகத் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 30-ம் தேதி கார்த்திக் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


இச்சூழலில், கார்த்திக் கோபிநாத் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 2 வாரங்களுக்கு, நாள்தோறும் காலை 10.30 மணிக்கு ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளித்து பூந்தமல்லி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad