திருவள்ளூர் மாவட்டத்தில் 1600 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் 1600 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,600 பயனாளிகளுக்கு கால்நடைத் துறை மூலம் 3.05 கோடி மதிப்பீட் டில் இலவச ஆடுகள் வழங்கும் தொடக்க விழாநடைப்பெற்றது. 


கும்மிடிப்பூண்டி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கி 53பயனாளிகளுக்கு வழங்கினார்.


இதில் முன்னாள் எம்எல்ஏ சி.எஸ். சேகர்,சேர்மன்கள் கும்மிடிப்பூண்டி சிவக்குமார், மீஞ்சூர் ரவி,  ஆணை யாளர் வாசுதேவன், வட்டார வளர் ச்சி அதிகாரி நடராஜன், துணைச் சேர்மன் மாலதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், கால்நடை துறை  மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் கோபு, உதவி இயக்குனர் டாக்டர் கோபி கிருஷ்ணன், கால்நடை மருத்துவர்கள் சரோதம்மன், கிருஷ்ணகுமார், ஜாஸ்மின், உமா, சித்ரா, ஷோபன, பிரேம்குமார், செல்வ பிரியா, மோகனப்பிரியா, கால்நடை ஆய்வாளர்கள் கால் நடை பராமரிப்பு உதவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 


மற்றும் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad