ஆவடியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி, ஒருவர் மருத்துவமனையில் அனுமதி, - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

ஆவடியில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி, ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு 47வது வார்டு  அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள  ஆப்டிமா அப்கிரேட் அடுக்கு மாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த குணசேகரன் வ/35 , முத்து வ 25 என இருவரும் உள்ளே இறங்கி வேலை செய்துகொண்டிருந்த பொழுது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் குணசேகரன் தற்போது தீவிர சிகிச்சையில் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு மீட்பு படையினர் இருவரின் உடலை மீட்ட நிலையில் சம்பவ இடத்தில் ஆவடி காவல் உதவி ஆணையர் புருஷோத்தமன் ஆய்வாளர் முத்துராமலிங்கம் துணை ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad