திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுகாதாரம் குறித்து ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் இந்த ஒன்றியத்தை சேர்ந்த வெள்ளகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அங்குள்ள அங்கன்வாடி பணியாளரிடம் குழந்தைகளின் வருகை பதிவேடுகளை பார்வையிட்டும், நாள்தோறும் உணவுப் பொருள்களின் தேவை குறித்து விவரங்களை கேட்டறிந்தார். அதேபோல் சமையலறைக்கு சென்று குழந்தைகளுக்கு தயார் செய்து வைத்திருந்த உணவை உட்கொண்டு ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு வழங்கும் உணவானது சுகாதார முறையில் சமைத்து வழங்கவும் அங்கன்வாடி உதவியாளர்கள் அறிவுரை வழங்கினார்.
அதையடுத்து அங்கன்வாடி காலி இடங்களில் முருங்கை மரங்களை வளர்த்து உணவு சமைக்க பயன்படுத்த வலியுறுத்தினார் பின்னர் தண்ணீர் குளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மேற்கொண்டார். இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் லலிதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment