அண்மையில் சென்னையில் 'கலாமின் உலக சாதனை நிறுவனம்' இறை வழிபாட்டுடன் தொடர்புடைய இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி பயிலும் 5 வயது 4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில் தினசரி பிரார்த்தனை ஸ்லோகங்கள் வாசித்ததற்காக 'உலக சாதனை லெஜண்ட்' என்ற பட்டம் பெற்றார், அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்தியது.
No comments:
Post a Comment