பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரசார் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 May 2022

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரசார் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை நேற்று சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் அருள் அன்பரசு எக்ஸ் எம்எல்ஏ மாநில பொதுச் செயலாளர்  பூவை ரமேஷ் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் கிரனைட் ராஜன் பூந்தமல்லியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு கீழ் அமர்ந்து கண்ணில் கருப்பு துணி கட்டி விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad