கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூபில் மைனர் யூடியூப் விஜய் என்பவர் இந்து கடவுளை கொச்சைப்படுத்தும் வகையில் நடராஜர் மற்றும் காளி தெய்வத்தை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவு ஒன்றை யூடிபில் பதிவிட்டு இருந்தார் இது இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் மன அமைதியை கெடுக்கும் வகையில் அமைந்திருந்ததை கண்டித்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் முன்பு தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக மைனர் விஜய் என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களின் அமைதிக்கும் இந்துக்களின் மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் அவருடைய வீடியோ பரவி உள்ளதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை மீறும் பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment