திருவள்ளுர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட சக்திநகர் பகுதியில் ரமேஷ் (வயது 45) தனது குடும்பத்தினருடன் வசித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் . இவருக்கு இரண்டு மனைவிகள், இவர் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
முதல் மனைவி லதாவுடன் திருமணமாகி பிரசன்னா (வயது 17) மகனும், மதுமிதா (வயது 15) மகளும் உள்ளனர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற பிரியதர்ஷினி என்ற பெண்னை இரண்டாம்தரமாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு கிரிஷ்வர் (வயது 2)என்ற மகன் உள்ளார், இவர்களுக்கு ஏற்கனவே குடும்பத்தில் பல பிரச்சினைகள் நடந்திருக்கின்றன. சம்பவத்தன்று வழக்கம்போல் இரண்டாவது மனைவி வீட்டிற்கு ரமேஷ் வந்துள்ளார்.
சிறிதுநேரம் இரண்டாவது மனைவி வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்த நேரத்தில் 18.5.2002 பிற்பகல் 2மணியளவில் வீட்டின் கதவை பூட்டி கொண்டு புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டார், இதனையறிந்த மனைவி பிரியதர்ஷினி கதவை திறக்கும் படி கூச்சலிட்டார், ஆனால் நேரம் அதிகமாக ஆகியும் கதவை திறக்கவில்லை, உடனே சந்தேகப்பட்டு வீட்டின் அருகே வசிக்கும் செல்வகுமார் என்ற நபரை அழைத்து கதவை உடைத்து பார்த்த போது ரமேஷ் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார்.
அதன்பின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று பிரதேத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரனையில் தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது இதனால் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது, மேலும் இதன் அடிப்படையில் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment