திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு எதிரே உள்ள மேல் மாநகரில் அமைந்துள்ள அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளியில் கோடைகால மழையிலேயே பள்ளியில் உள்ளேயும் சாலைகளிலும் அதிக நீர் தேங்கி உள்ளதால் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் அவதிப்படும் நிலையில் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது ஆனால் சிறு மழைக்கே இந்த நிலைமை என்றால் மழைக்காலங்களில் இதன் நிலைமையை எண்ணிப்பாருங்கள் அரசு உடனடியாக தலையிட்டு இந்த பள்ளியின் அருகே நீர் தேங்காமல் பள்ளியின் உள்ளேயும் நீர் தேங்காமல் இருக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கடந்த ஆண்டு அரசு எந்த ஒரு வேலையும் செய்யாததால் இன்று இந்த சூழல் நிலவிவருகிறது மீண்டும் இதே நிலைமை தவிர்க்க வேண்டும் என்றால் உடனடியாக பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
No comments:
Post a Comment