மின் மோட்டார் மூலம் ஆம்னி பஸ்ஸை கழுவும்போது மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

மின் மோட்டார் மூலம் ஆம்னி பஸ்ஸை கழுவும்போது மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரவாயல் அருகே மின் மோட்டார் மூலம் ஆம்னி பஸ்ஸை கழுவும்போது மின்சாரம் தாக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.


போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (22), ஆம்னி பஸ் டிரைவராக வேலை செய்து வந்த இவர், நேற்று வானகரம் பஸ் நிறுத்தம் அருகே ஆம்னி பஸ்சை நிறுத்தி மின்மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மதுரவாயல் போலீசார், உயிரிழந்த கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad