மெட்ரோ ரயில் பணிகளால் ஆவடியில் போக்குவரத்து மாற்றம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 May 2022

மெட்ரோ ரயில் பணிகளால் ஆவடியில் போக்குவரத்து மாற்றம்.

மாதிரி படம், நன்றி : TOI.

மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், ஆவடி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை- பூந்தமல்லி டிரங்க் சாலையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை, மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், இன்று முதல் 9ம் தேதி வரை கீழ்க்கண்ட பகுதிகளில், தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ஆவடி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 


போரூர் -- பூந்தமல்லி போரூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் அனைத்து வாகனங்களும் கரையான் சாவடி சந்திப்பில் வலது புறமாக திரும்பி, ஆவடி சாலை வழியாக, சென்னீர்குப்பம் சென்று, சென்னை பெங்களூரு புறவழிச்சாலை வழியாக பூந்தமல்லி பேருந்து நிலையத்தை அடையும்.பஸ் அல்லாத இதர வாகனங்கள், குமணன் சாவடி சந்திப்பில் வலது புறமாக திரும்பி, சவீதா பல் மருத்துவமனை வழியாக, சென்னை - பெங்களூரு புறவழிச் சாலை இடது புறமாக திரும்பி, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.


கோயம்பேடு வழியாககோயம்பேடு, மதுரவாயல் வழியாக பூந்தமல்லி செல்லும் அனைத்து வாகனம் மற்றும் வெளியூர் செல்லும் அரசு பஸ்கள், ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லுாரி வழியாக, சவீதா பல் மருத்துவ மனை மேம்பாலம் கடந்து, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். மாநகர பஸ்கள் அனைத்தும், குமணன் சாவடி வழியாக சென்று, கரையான் சாவடி சந்திப்பில் வலது புறமாக திரும்பி, ஆவடி -- சென்னீர்குப்பம் வழியாக பூந்தமல்லி மற்றும் சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.


மாங்காடு -- பூந்தமல்லி மாங்காடில் இருந்து பூந்தமல்லி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், குமணன் சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சென்னீர்குப்பம் சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.அனைத்து மாநகர பஸ்களும், பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக திரும்பி, கோர்ட் வழியாக பூந்தமல்லி பஸ் நிலையத்தை அடையலாம். பஸ் அல்லாத இதர வாகனங்களும், மாங்காடு சந்திப்பில் இருந்து வலது புறமாக திரும்பி சவீதா பல் மருத்துவமனை வழியாக சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.


குமணன்சாவடி வழியாகபூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பஸ்கள் மற்றும் நசரத்பேட்டை, திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும், பாரிவாக்கம் சாலை வழியாக, பூந்தமல்லி புறவழி சாலையை அடையும். போரூர், மாங்காடு மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், சென்னை -- பெங்களூரு புறவழிச் சாலையில், வலது புறம் திரும்பி, சவீதா பல் மருத்துவமனை சென்று, மீண்டும் வலது புறம் திரும்பி, குமணன் சாவடி வழியாக, இதர இடங்களை அடையலாம்.


ஆவடி மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும், பூந்தமல்லி புறவழிச் சாலை வழி சாலையில், சென்னிர்குப்பம் சென்று இடது புறமாக இலக்கை அடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad