இருசக்கர வாகனத்தில் சென்று 2 இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

இருசக்கர வாகனத்தில் சென்று 2 இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது.

சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் அருண் (வ/21) என்பவர் 04.05.2022 அன்று மாலை சுமார் 05.30 மணியளவில் விருகம்பாக்கம், நெற்குன்றம் ரோடு, சித்திரை தெரு சந்திப்பில் உள்ள ஒரு கடையில் பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி அருண் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். 


பின்னர் மாலை சுமார் 06.15 மணியளவில் விருகம்பாக்கம், ரத்னாநகர் பகுதியில் டியூசன் முடித்து நடந்து சென்று கொண்டிருந்த தீபா என்ற 16 வயது சிறுமி வைத்திருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி இருவேறு சம்பவங்கள் குறித்து அருண் மற்றும் சிறுமியின் உறவினர்,  விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்ததின்பேரில், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 2 சம்பவ இடங்களுக்கும் சென்று, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்ததில், 2 செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் என தெரியவந்தது.


மேலும் காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி 2 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 1) டென்சில் காஸ்ட்ரோ (வ/22) குலசேகரபுரம், சென்னை, 2) கண்ணன் (வ/19) சாலிகிராமம்,  ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர்களின் 2 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய  இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment

Post Top Ad