திருவள்ளூர் மாவட்டம் கால்பந்தாட்ட குழுக்கள் அதிகமுள்ள மாவட்டம், ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி பகுதிகளில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானத்தை அமைத்து தர வேண்டும் என்று சட்டப்பேரவையில் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த அமைச்சர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, திருவள்ளூர் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கால்பந்தாண்ட மைதானம் கேட்டுள்ளார்கள், கண்டிப்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும். உறுப்பினர் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் காக்களூர் பகுதியானது பளுத்தூக்கும் வீரர், வீராங்கணைகள் நிறைந்த பகுதி. அங்குள்ள நகர செயலாளரின் மகள் கூட இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.
கண்டிப்பாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காக்களூரில் பளுத்தூக்கும் அகாடமி அமைப்பதற்கான நடவடிக்கைகள் கண்டிப்பாக இந்தாண்டு பரிசீலிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் .
No comments:
Post a Comment