பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் அராஜகம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் அராஜகம்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகர மன்ற கூட்டம் இரண்டாவது முறையாக  நேற்று திங்கட்கிழமை 3 மணி அளவில் நடக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள் இதன்படி 19-வார்டு கவுன்சிலர்களும் நகரமன்ற தலைவர் அலுவலகத்தில் சென்று ஒரு மணி நேரம் கழித்து  கூட்ட அரங்குக்கு வந்தனர் இந்த கூட்டரங்கில் இரண்டு கவுன்சிலர் மட்டுமே இருந்தனர்.


உடனே நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் அவர்கள் கூட்டம் தொடங்கி பத்து நிமிடத்தில் கூட்டம் முடிவடைந்தது யாராக இருந்தாலும்  என்ன கேள்விகள் கேட்டாலும் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவிக்க வேண்டும் என்றால் எனது தனிப்பட்ட அறைக்குள் வந்து கூறுங்கள் யாரும் இங்கு கேள்விகளை கேட்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து பத்தே நிமிடத்தில் கூட்டத்தை முடித்தனர் இவர்களுக்கு ஆதரவாக பூந்தமல்லி ஆணையர் ரவிச்சந்திரன் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டார் இந்த கூட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொள்ளவில்லை சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவில்லை.


கூட்டத்திற்க்கு வந்த 10 பத்திரிகை நிருபர்களை தனியாக ஒரு அறைக்குள் வைத்தனர் அந்த அறைக்குள் இவர்கள் பேசுவது எதுவும் கேட்காமல் இருக்க ஒலிபெருக்கியை ஆப் செய்து விட்டனர் இவர்கள் வழங்கிய அஜந்தா காப்பிகளையும் யாருக்கும் வழங்காமல் அந்த இருபத்தொரு கவுன்சிலர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது இப்படி மறைமுகமாக செயல்பட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.


இதனை உடனடியாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுமட்டுமல்லாமல் கவுன்சிலர்கள் செல்லும் கூட்டரங்கில் கவுன்சிலர்கள் உடைய கணவர்களும் சென்று வாயை மூடிக் கொண்டு இருந்தது அனைவரையும் சந்தேகத்திற்கு ஆளாக்குகிறது எனவே இவர்கள் இப்படி அடவடியாக செயல்பட்டால் மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கை இழக்க நேரிடும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad