ஆவடி அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

ஆவடி அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் கரணாகரச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அமுதூர்மேடு பகுதியில் மழைக்காலங்களில் உபரிநீர் கால்வாயில் அதிகளவு நீர்வரத்து ஏற்படுகிறது.


இதன் காரணமாக சித்துக்காடு, கருணாகரச்சேரி, ராஜகுப்பம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பூந்தமல்லி மற்றும் திருவள்ளூர் செல்வதற்கு சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பொதுமக்களின் நீண்டகாலமாக கோரிக்கையை ஏற்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முயற்சியால் 7.5 மீட்டர் அகலம் மற்றும் 83 மீட்டர் நீளத்திலும் உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.5.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை நேற்று அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 


இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, பூந்தமல்லி மேற்கு ஓன்றிய செயலாளர் டி.தேசிங்கு, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ரமேஷ், மா.ராஜி, ஒன்றிய கவுன்சிலர் கே.சுரேஷ்குமார், ஜி.சி.சி.கருணாநிதி, விமல் ரோஷன், ஓன்றியச்செயலாளர் தங்கம் முரளி, வில்லிவாக்கம் ஓன்றிய செயலாளர் வீரமணி, ஊராட்சி தலைவர் சி.அண்ணாகுமார் இ.பிரதீப் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad