TN 02 AE 3220 என்ற இருசக்கர வண்டியில் வந்த இருவர் சென்னை பாடி குப்பம் வேவ்ஸ் சிக்னல் அருகில் காரை இடித்துவிட்டு தப்பி ஓடினார்கள் உடனே விரட்டி சென்று பார்க் ரோடு அப்பலோ மருந்தகம் அருகில் மடக்கி பிடித்து ஏன் இப்படி செய்துவிட்டு ஓடுகிறீர்கள் என்று கேட்டபோது அப்படித்தான் செய்வோம் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி பேச ஆரம்பித்து வாக்குவாதம் ஆனது பிறகு கண்ணாடி போட்டு இருக்கும் அந்த நபர் நான் யார் தெரியுமா டிஜிபிக்கு தெரிந்தவன் உன்னை என்ன செய்கிறேன் என்று பார்க்கிறாயா என்று மிரட்ட மற்றொருவர் தான் அணிந்திருக்கும் சட்டை கலரையும் சட்டையும் கலைத்துவிட்டு நான் யார் தெரியுமா பிரபல ரவுடி உடன் இருக்கிறேன் உன்னை என்ன செய்கிறேன் என்று பார் என்று கூறி பிரச்சினையை ஆரம்பித்து பிரச்சனை முற்றும் நிலையில் வந்தது உடனடியாக சுதாரித்து காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கப்பட்டது புகார் தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த இருவரும் TN 02 AE 3220 என்ற இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
அங்கு வந்த காவலர்கள் விசாரித்தபோது அவர்கள் தப்பி ஓடிய விசயம் தெரிவிக்கப்பட்டது, காவலர்களிடம் அவர்களின் புகைப்படம் மற்றும் வாகனத்தின் புகைப்படமும் கொடுக்கப்பட்டது, ரோட்டில் இதேபோன்று பிரச்சனையில் ஈடுபடும் நபர்கள் தான் ரவுடி என்றும் எது வேண்டுமானாலும் செய்து விடுவோம் என்றும் மற்றொருவர் டிஜிபி எனக்கு தெரிந்தவர் என்றும் கூறி தப்பிக்க பார்க்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட நபர்களின் பணிவான வேண்டுகோள்.
No comments:
Post a Comment