அகில இந்திய பத்திரிகையாளர் சங்க ஆறாம் ஆண்டு தொடக்க விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

அகில இந்திய பத்திரிகையாளர் சங்க ஆறாம் ஆண்டு தொடக்க விழா.

பாண்டேஸ்வரம் ஊராட்சியில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க ஆறாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராம் துணை ஆணையர் வெங்கடேசன் பங்கேற்பு, அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவும் மாநிலச் செயலாளர் ரவிக்குமார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாண்டேஸ்வரம் ஊராட்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பறை இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பறை இசை உபகரணங்கள் வழங்குதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி மாநில செயலாளர் ஜெகநாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் பி மன்னார் ஏற்பாட்டில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பட்டாபிராம் துணை ஆணையர் வெங்கடேசன் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜி திருமுல்லைவாயில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் பாண்டேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ராமு ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆர் ரவிக்குமார் பொதுச் செயலாளர் ஆர் கதிரவன் பொருளாளர் ஆர் கிருஷ்ணன் பொதுக்குழு உறுப்பினர் டி நிக்கல் ராஜ் மாவட்ட நிர்வாகிகள் ரமேஷ் பெர்னாட்ஷா சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad