பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டு உட்பட்ட சுற்றுப்பகுதியில் வசித்து வரும் போயர் ஒட்டர் இன மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்பொழுது பேசுகையில் தமிழகத்திலுள்ள இருபத்திநான்கு மாவட்டத்திலும் போயர் ஒட்டர் இன மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் பின்தங்கி உள்ளதாகவும் அவர்கள் இன்றுவரை பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உடன் இணைந்து ஆலோசனை கூட்டம் பல்வேறு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வருவதாகவும் வரும் எட்டாம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் இருபத்தி நான்கு மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பருத்திப்பட்டு பகுதிக்குட்பட்ட அண்ணனூர் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் மக்கள் ராஜ்யம் கட்சியினர் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தமிழகத்திலுள்ள இருபத்திநான்கு மாவட்ட பகுதியை சார்ந்த போயர் ஒட்டர் இன மக்களுடன் கலந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர் போயர் ஒட்டர் இன மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் 50 லட்சம் போயர் ஒட்டர் இன மக்களை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரம் போயர் ஒட்டர் இன சமுதாய மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு கல்குவாரிகள் வைப்பு நிதி இல்லாமல் கல்குவாரி வழங்க வேண்டும் என்றும் மற்றும் நிலத்தடி பகுதியில் கல்லுடைக்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வித தடைகளும் இன்றி கல் உடைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் டி என் டி சாதி சான்றிதழில் போயர் ஒட்டர் இனத்தின் பதினோரு உட்பிரிவுகளையும் ஒன்றிணைந்து அதில் உள்ள குளறுபடிகளை சரி செய்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்தத் தடையுமின்றி டி என் டி என்று ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment