திருவள்ளுர் மாவட்டம், ஆவடி பகுதிகளில் 6 இடங்களில் மின்சாரம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகையாக ₹44.53 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை / மேற்கு மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட ஆவடி பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்டபோது 6 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் ₹42,38,267 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ₹2,15,000 செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: திருவள்ளூர்: தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தலின்படி, சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி மற்றும் சென்னை தொழிலாளர் இணை ஆணையர் - 2 வேல்முருகன் ஆகியோர் வழிகாட்டுதல்படி, திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுதா தலைமையில் அதிகாரிகள் தேசிய பண்டிகை விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இதில் 1958ம் வருட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், முறையாக விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்ட 61 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் முறையாக தொழிலாளர் நலச்சட்டங்களை பின்பற்றுமாறும், அமல்படுத்துமாறும் தொழிலாளர் உதவி ஆணையர் சுதா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment