ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே பொன்னியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள, 50 ஆண்டு பழமையான ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது நேற்று இரவு வழக்கம்போல் கோவில் ஊழியர் பணிகளை முடித்து கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் இன்று வழக்கம் போல் காலை கோவிலுக்கு வந்து திறக்கும் பொழுது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பூட்டை உடைத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளையர்கள் கொள்ளையடித்த இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக திருமுல்லைவாயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார் விரைந்து வந்த காவலர்கள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளியை தேடி வருகின்றனர் ஆவடி சுற்றுப்பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிப்பது வாடிக்கையாக கொண்டுள்ளனர் கொள்ளையர்கள் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment