குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

குப்பை நகரமாக மாறும் ஆவடி மாநகராட்சி.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து மேயர் துணை மேயர் போன்ற பொறுப்புகளை ஏற்றபின் மாநகராட்சி 2 வாரங்கள் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருந்து வந்தது தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு தள்ளப்படும் நிலைமையில் ஆவடி மாநகராட்சி உருவெடுத்து வருகிறது.

தற்போது தூய்மைப் பணியாளர்கள் மந்தமாக செயல்பட்டு வருவதால் ஆவடி மாநகராட்சி முழுவதும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது இந்த குப்பைகளை அள்ளும் பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர் அவர்களும் ஆய்வு செய்யாமல் அவரவர்கள் பணியினை செய்து வருவதால் இன்று குப்பைகள் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது இதனால் மாடுகள் பன்றிகள் கோழி போன்றவற்றை குப்பைகளை சாலை முழுவதும் பரவிக் கிடப்பதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.


இதனை மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி அவர்கள் கண்டும் காணாமலும் இருப்பது மன வேதனை அளிக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே உடனடியாக இந்த குப்பைகளை அமைச்சர் அவர்களும் மேயர் அவர்களும் பார்வையிட்டு ஆவடி மாநகராட்சி தூய்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment

Post Top Ad