திருவள்ளூரில் நிலக்கரி கொண்டு செல்லும் டிப்பர் லாரி வாடகை கட்டணத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க கோரி லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கத்தினர் டீசல் விலை உயர்வு வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தங்களது தொழில் செய்ய முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. டீசல் விலைய உயர்வு, சுங்கவரி கட்டணம், உதிரிபாங்கள் போன்றவை விலை உயர்ந்த நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணம்டன் ஒன்றுக்கு 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும் 30 சதவீதம் வாடகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment