திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் என ஆறு நகராட்சி, ஆரணி, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, நாரவாரிக்குப்பம், ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் என, எட்டு பேரூராட்சிகள் உள்ளன. ஆவடி மாநகராட்சியும் உள்ளது.பூஜ்ஜியம்ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு உள்ளன. மாற்று ஏற்பாடாக, மீண்டும் மஞ்சப்பை இயக்கம் கொண்டு வரப்பட்டு உள்ளது. என்ன தான், மாற்று திட்டம் கொண்டு வந்தாலும், திருவள்ளூர் மாவட்டத்தில், 'பிளாஸ்டிக் ராஜ்ஜியம்; விழிப்புணர்வு பூஜ்ஜியம்' என்ற அளவில் தான் உள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், தினமும், 12 ஆயிரம் கிலோ அளவிற்கு, மக்காத குப்பையை துப்புரவு ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.
இருப்பினும், நகர் முழுதும், பிளாஸ்டிக் கழிவுகள், பரந்து, விரிந்து காணப்படுகின்றன.தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலும், அதை ஒட்டி உள்ள கழிவு நீர் கால்வாயிலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மலை போல் குவிந்துள்ளன.திருவள்ளூர் நகரத்திலும்,காக்களூர் ஏரிக்கரை சாலையிலும், பிளாஸ்டிக் கழிவு குப்பை குவிந்து கிடக்கின்றன.
இவற்றை அகற்ற, உள்ளாட்சி நிர்வாக துப்புரவு பணியாளர்கள் முன்வராத நிலையில், மஞ்சப்பை பயன்படுத்தினால், பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என, மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது எந்த அளவிற்கு பயனைத் தரும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.விழிப்புணர்வு ஒருபுறம்; நடவடிக்கை மறுபுறம்திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதை, அனைத்து பகுதிகளிலும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்துவோர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்குள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட கலெக்டர், திருவள்ளூர்.குப்பை கிடங்கான கூவம் ஆறுகடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில், மணவாள நகர், கபிலன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் உட்பட, 15க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன.இந்த ஊராட்சியில், தினமும், 2,000 கிலோ குப்பை சேகரமாகிறது.
அதை, டிராக்டர்கள் மூலம் கொண்டு வந்து, மணவாள நகர் அடுத்த, கணேசபுரம் அருகே உள்ள கூவம் ஆற்றில் கொட்டி வருகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கூவம் ஆற்றில் குப்பை கொட்டி வருவதை, பொதுப்பணி துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.இதேபோல் பேரம்பாக்கம் ஊராட்சியிலும் கூவம் ஆற்றில் குப்பை, இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் தாராளம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், சாலையோர உணவகங்கள் என, அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.உள்ளாட்சி நிர்வாகங்கள், பிளாஸ்டிக்கை ஒழிக்க முனைப்புடன் செயல்படாமல், கடமைக்கு பிளாஸ்டிக் சோதனை நடத்தி பறிமுதல், அபராதம் விதித்து வருகின்றனர்.
ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும், குப்பை குவிக்கப்படும் இடத்தில், பிளாஸ்டிக் மட்டுமே பெரும்பான்மை வகிக்கின்றன. அதுவும், நீர்நிலைகளை ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. மஞ்சப்பை அறிமுகம் செய்தால் மட்டும் போதாது. அதற்கு முன் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.பாழாகும் ஆரணி ஆறுபொன்னேரி நகராட்சியில், தினமும் 7,000 முதல், 8,000 கிலோ குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் ஒரு பகுதி மட்டுமே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும், மக்காதவை என தரம் பிரித்து, மறு சுழற்சிக்குக்கு பயன்படுத்தப்பபடுகிறது. மற்றவை, ஆரணி ஆற்றின் கரையோரங்களில் கொட்டி குவிக்கப்படுவதுடன், அவ்வப்போது தீயிட்டும் எரிக்கப்படுகிறது.இவ்வாறு எரிக்கப்படும் குப்பையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், டயர் உள்ளிட்ட பல்வேறு மக்காத பொருட்களும் சேர்ந்து எரிக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றின் கரையோரங்களில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் அதிகப்படியான மழை பொழிவு காலங்களில், தண்ணீருடன் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ஆங்காங்கே தேங்குகின்றன. ஆறு வறண்ட பின், அவை அப்படியே மண்ணில் புதைந்து நிலத்தடி நீர் சேமிப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
யார் கட்டுப்படுத்துவது? ஆர்.கே.பேட்டை சுற்று வட்டாரத்தில், மாலை நேரத்தில் காலி மைதானத்தில், மது பிரியர்கள் உற்சாக மயக்கத்தில் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், மைதானம் முழுதும் பரவிக்கிடக்கின்றன. இதனால், சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.மாலை 6:00 முதல், இரவு 11:00 மணி வரை, இந்த பகுதியில் குழுக்களாக அமர்ந்து மது அருந்துவோரால் ஏராளமான பிளாஸ்டிக் குப்பை குவிந்து கிடக்கின்றன.
பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், இருட்டியதும், மொபைல் போன் விளக்குகளை எரியவிட்டு, அந்த மங்கலான வெளிச்சத்தில் நுாற்றுக்கணக்கானோர் மது அருந்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தினால், இந்த பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவு தடுக்கப்படும்.
No comments:
Post a Comment