ஆவடியில் சிஆர்பிஎஃப் காவலர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீட்டிற்குள் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது துப்பாக்கிக் குண்டு ஒன்று அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையை துளைத்து உள்ளே விழுந்தது, அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன, வீட்டினுள் துப்பாக்கிக்குண்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment