அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்குள் நுழைந்து உதவி மேலாளர் மீது தாக்குதல். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 April 2022

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்துக்குள் நுழைந்து உதவி மேலாளர் மீது தாக்குதல்.

தனியார் நிறுவன உதவி மேலாளரை முன்னாள் ஊழியர்கள் இரண்டு பேர் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த ஹரீஸ், ஏஜெஸ் ஆகியோர் சேமிப்பு கிடங்கில் இருந்து பொருளைத் திருடியதாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி இருவரும் உதவி மேலாளர் புகழேந்தியை அணுகிய போது, நிர்வாகத்தின் நடவடிக்கையை மீற முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ஹரீஸ், ஏஜெஸ் இருவரும் அலுவலகத்திற்குள் நுழைந்து புகழேந்தியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். 


இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன, புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், அந்த இரண்டு பேரையும் தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad