மாணவர்கள் ஆசிரியரை வகுப்பறையில் மிரட்டும் காட்சியும், பெஞ்சுகளை உடைக்கும் காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பள்ளி அருகே உள்ள பஸ் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்களை பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது ஆவடியில் இருந்து கண்ணியம்மன் நகர், கோயில் பதாகை, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாநகர பஸ்களில் ஆபத்தை உணராமல் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த படி வந்தனர்.
இதனைக் கண்ட போலீசார் அந்த பஸ்சில் தொங்கியபடி வந்த அனைவரும் கீழே இறக்கினர், பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அங்கேயே தோப்புக்கரணம் போடுமாறு கூறி தண்டனை வழங்கினர். மீண்டும் இதுபோல் தொங்கியபடி பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.
No comments:
Post a Comment