பூந்தமல்லியில் பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து கருத்து கேட்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 April 2022

பூந்தமல்லியில் பாதாள சாக்கடைத் திட்டம் குறித்து கருத்து கேட்பு.

பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு நகராட்சி மற்றும் 23 ஊராட்சிகளை இணைத்து ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் சுமார் 1000 கோடி மதிப்பில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் மண்டலம் இரண்டில் பூந்தமல்லி மாங்காடு நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகளில் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதுதொடர்பாக அனைத்து விதமான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டன, இந்தநிலையில் பூந்தமல்லி, மாங்காடு நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சிகளில் சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் பூந்தமல்லியில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.. இதில் பூந்தமல்லி நகராட்சி ஆணையாளர் நாராயணன், நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர்  மாங்காடு நகராட்சி ஆணையாளர் ரா.கமா, நகராட்சி தலைவர் சுமதி முருகன், நகராட்சி பொறியாளர் நடராஜன், பணி மேற்பார்வையாளர் ரவி சந்திரன் மற்றும் அதிகாரிகள் கருத்து கேட்டனர்.


இதில் கவுன்சிலர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் நகர நல சங்கத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தினை தெரிவித்தனர். இதில் பூந்தமல்லி திமுக நகர செயலாளர் திருமலை, மாவட்ட பிரதிநிதி சுதாகர், அதிமுக நகர செயலாளர் ரவிச்சந்திரன் ,சி.வை. ஜாவித் அகமது , ஒன்றிய கவுன்சிலர் கவுதமன், ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன், காட்டுபாக்கம் ஊராட்சி மன்ற  தலைவர் ஷீலா சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad