இதில் நகராட்சி ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் மற்றும் மொத்த கழிவு உற்பத்தியாளர்களுகாண அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள், நிர்வாகிகள் மண்டப உரிமையாளர்கள் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் கலந்து கொண்டனர். திருவேற்காடு நகராட்சியில் தினமும் 25 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன இந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை இயற்கையான முறையில் உரமாக்கப்படுகிறது.
மக்காத குப்பை மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள், கடைகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் நாளொன்றுக்கு 100 கிலோவிற்கு மேல் குப்பைகளை உற்பத்தி செய்தால் அவருக்கு அவர்கள் மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் என்று என்று கருதப்படுவார்கள். இவ்வாறு உற்பத்தியாகும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக தயாரிக்கவும்,மக்காத குப்பைகளை நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும். இதற்கு நகராட்சி உதவியும் ஒத்துழைப்பும் தரும்.
நம் குப்பைக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்ந்து தூய்மையான குப்பை இல்லாத திருவேற்காடு நகராட்சி உருவாக்க வேண்டும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நகர்மன்றத் தலைவர் மூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment