திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் திருவேடங்கிநல்லூர் பகுதியில் முதல்கட்டமாக தனியார் கட்டிடத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டது அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியரால் ஜான் வர்கீஸ் தலைமை வகித்து புதிய அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது துணை பதிவுத்துறை தலைவர் சேகர் மாவட்ட பதிவாளர் கல்பனா, தணிக்கை மாவட்ட பதிவாளர் ராமச்சந்திரன், சார் பதிவாளர், பதிவுத் துறை, பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த அலுவலக கட்டுப்பாட்டில் திருவள்ளூர் ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி, திருவாலங்காடு, மணவாளநகர், பேரம்பாக்கம், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆரணி, ஆகிய அலுவலகங்கள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment