ஆவடியில் இருபத்தி எட்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

ஆவடியில் இருபத்தி எட்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி அருகில் பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை  பார்வையிட்டார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக அரசின் உத்தரவின்படி மாபெரும் தடுப்பூசி வழங்கும் பணி இந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் இன்று மாபெரும் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் ஆயிரம் தடுப்பூசி மையங்களில் சுமார் 4,000 பணியாளர்கள் மூலம் செயல்படுத்த உள்ளது. 


இருபத்தி ஏழு மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மொத்தமாக 14 லட்சத்து 49 ஆயிரத்து 429 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. எனவே இன்று (30.4. 2022) நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி  முகாமில் இம்மாவட்டத்தில் இதனால் கொரோனா இல்லாதவர்கள் இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணைக்கான தகுதி வாய்ந்த நபர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ,ஆவடி மாநகராட்சி மேயர் திரு உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad