பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம், பாண்டூர் TELC காபீஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்தும், விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்தும் காணொளி காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சதீஷ், செயலாளர் சரவணன், சவுக்கார்பாண்டியன், சத்யமூர்த்தி, விஜி, தர்மலிங்கம், வெங்கட், சுரேஷ், சுரேஷ்பாபு, யுகேஷ், பாபு, கோபி, பிரபு, கோபால், வெங்கடேசன் உள்ளிட்ட திருவள்ளூர் டிப்பர் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad