பூந்தமல்லியில் பட்டபகலில் பைக்கை திருடும் ஆசாமி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

பூந்தமல்லியில் பட்டபகலில் பைக்கை திருடும் ஆசாமி.

திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த பாப்பான் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் அதே பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பூந்தமல்லியில் உள்ள எலக்ட்ரீசியன் கடை ஒன்றில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் வாசலில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார் பின்பு வெளியே வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் கடையின் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவர் ஆராய்ந்து பார்த்ததில் டிப்டாப்பாக உடை அணிந்தபடி வரும் மர்ம நபர் ஒருவர் கடையின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு செல்வதும் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வரும் நபர் திருடிய இருசக்கர வாகனத்தை காலில் தள்ளிகொண்டு எடுத்துச் செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


மேலும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிக காணப்படும் பூந்தமல்லி முக்கிய பிரதான சாலையில் இருசக்கர வாகனம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad