இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,கல்லூரி நிர்வாக உறுப்பினர் திரு. சி.வி.ஹரிகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில், கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.சு.கு. திருக்குமரன் அவர்கள் துவக்கி வைக்க, கல்லூரித் துணை முதல்வர்(கல்வி) முனைவர் உ.இந்துமதி அவர்கள் வரவேற்புரை நல்க, கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி அவர்கள் ஆண்டறிக்கை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.கௌரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். அவர் ஆற்றிய உரையில், மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கருதுகோள், ஒழுக்கம் முதலியவற்றை தனது வாழ்க்கையில் இடையறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் ,உலகிலுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளங்கைக்குள் கொண்டுவரும் அலைபேசியின் முக்கியத்துவத்தையும் மாணவிகளுக்கு சிறப்புற எடுத்தியம்பினார்கள். அதன் பின்னர் 2017-2020-ஆம் கல்வியாண்டிற்கான மாணவிகளுக்கு பட்டச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், வெள்ளிப் பதக்கம், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்களுக்கும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக அளவில் இரண்டாமிடம் பெற்ற உயிர்வேதியியல் துறை சார்ந்த மாணவி வி.கீதாஞ்சலியும், ஒன்பதாமிடம் பெற்ற நுண்ணுயிரியல் துறை மாணவி கே.நந்தினியும் பல தங்க,வெள்ளி பதக்கங்களுடன் பரிசுக்கோப்பையையும் தட்டிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரித் துணை முதல்வர்(நிர்வாகம்) முனைவர் சி இராமசாமி அவர்கள் நன்றியுரை நல்க,நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியினைக் கணினிப் பயன்பாட்டியல் துறை பேராசிரியர் வித்யா அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.
No comments:
Post a Comment