கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பத்தில் புதிய வீட்டிற்கு இந்திரஜித் என்பவர் மின் இணைப்பு கேட்டு கும்மிடிப்பூண்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின்வாரிய வணிக ஆய்வாளர் (commercial inspector) ஜெகன் என்பவர் மின் இணைப்பு வழங்க 15ஆயிரம் ரூபாய் தமக்கு லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்திரஜித் அவரிடம் பேரம் பேசியதில் இறுதியாக 13000ரூபாய் கேட்டுள்ளார் மின்வாரிய அதிகாரியான ஜெகன். இதனால் அதிருப்தியடைந்த ஜெகன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய 13000ரூபாயை இந்திரஜித்திடம் அளித்து மின்வாரிய ஊழியரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் பேரில் இந்திரஜித் மின்வாரிய ஊழியர் ஜெகனை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வெளியே கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் வைத்து 13000ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வணிக ஆய்வாளர் ஜெகனை கையும் களவுமாக கைது செய்தனர். மின் இணைப்புக்காக 13000ரூபாய் லஞ்சமாக வாங்கிய மின் ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment