பொன்னேரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேர் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று காலை முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர், கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவிப் பேராசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவ-மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது மாணவ-மாணவிகள் கோஷமிட்டு வருகின்றனர், மாணவ-மாணவிகள் போராட்டம் காரணமாக மறுஅறிவிப்பு வரும்வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment