சமீபத்தில் தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டது, அதில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதிக்குழு, 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும்.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என நிபந்தனைகளை விதித்துள்ளது'' என்பதால் தமிழகத்தில் 600 ச.அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1200 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 50 சதவீதமும் 1201 முதல் 1800 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடங்களுக்கு 75 சதவீதமும் 1800 சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரி உயர்வு செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
திமுக ஆட்சியின் மக்கள் விரோத வரி உயர்வை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுதலின்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர், அதன் ஒருபகுதியாக இன்று ஆவடி மாநகராட்சியில் பாஜக மாநிலச் செயலாளர் திருமதி.சுமதி வெங்கடேஷ் மற்றும் மாநில ஓபிசி அணி தலைவர் ஜெ.லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.jpeg)
இந்த ஆர்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் A.ராஜ்குமார், திருவள்ளூர் கிழக்கு தலைவர் ராஜா ஆகியோரின் முன்னிலையில் இன்று பாஜக மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment