இந்நிலையில், இன்று காலை கோபிநாத்தின் சகோதரி சென்று பார்த்த போது, குடிசையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார், கோபிநாத்தின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில், கடந்த 2017-ம் ஆண்டு, இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டிடிவி தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தியதை அடிப்படையாக கொண்டு, அமலாக்கத்துறை வழக்கு பதிந்து சுகேஷ் சந்திராவிடம் விசாரணை நடத்தியது. இந்த விவகாரத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கறிஞர் கோபிநாத்தின், மூத்த வழக்கறிஞரான ராமாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கறிஞர் மோகன்ராஜின் ஜூனியர் தான் இந்த கோபிநாத் என்பதால், விசாரணைக்கு நாளை டெல்லியில் ஆஜராக அமலாக்கத்துறை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வழக்கறிஞர்ன கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு, கோபிநாத் வீட்டிலும், அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாக தெரிகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவேற்காட்டில் வழக்கறிஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டநிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்ததால் தற்கொலையா என காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment