பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 April 2022

பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

திருவள்ளுர் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள், அதன்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்கள் வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக ஆண்டிற்கு பத்தாயிரம் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், மாநகராட்சி ஆணையர், திட்ட அலுவலர், சம்பந்தபட்ட செயற் பொறியாளர் (நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) மற்றும் மாவட்டத் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆகியோர் கொண்ட குழு மாவட்ட அளவில் பயனாளிகளை தேர்வு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 


இறுதி ஒப்புதலினை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் வழங்கும் பயனாளிகளே வீட்டைக் கட்டிக்கொள்வார்கள். கட்டுமானத் பணிக்கேற்ப நான்கு கட்டங்களாக பிரித்து இந்த உதவிப்பணம் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு கட்ட கட்டுமான நிறைவுப் பணிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சான்று அளிக்கப்பட வேண்டும். அந்த சான்றின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக பணம் அனுப்பி வைக்கப்படும். 


இதற்கான அரசாணை தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


  1. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும்.
  2. கட்டுமான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து
  3. 3 ஆண்டு காலத்திற்கு மேல் நடப்பில் இருத்தல் வேண்டும். தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும்.
  4. பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.
  5. அரசின் வேறு எந்த இலவச வீட்டு வசதி திட்டங்களில் பயன் பெற்றிருக்க கூடாது.
  6. ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
  7. வீடு கட்டுவதற்கு சொந்தமாக பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 28.ச.மீ வீட்டு மனை இருத்தல் வேண்டும்.
  8. பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளியின் பெயரில் வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும் அல்லது உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து வீட்டுமனை கூட்டுப்பட்டா இருத்தல் வேண்டும்.

மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பி;த்து பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

 

No comments:

Post a Comment

Post Top Ad