திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 April 2022

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி வரை குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்: மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வருகின்ற 25ம் தேதி வரை குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார், குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் கூரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது வருகின்ற 25ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.


எனவே குடிசை வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகள் தங்களது ஆதார் அட்டை எண் மற்றும் நிலம் தொடர்பான பட்டா மற்றும் இதர ஆவணங்களின் நகல்களை கணக்கெடுப்பு செய்யவரும் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர், தூய்மை பாரத இயக்க ஊக்குனர் ஆகியோரிடம் காண்பித்து பதிவுசெய்து கொள்ளவேண்டும். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad