திருவள்ளூரில் 108ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம், - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 April 2022

திருவள்ளூரில் 108ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்,

திருவள்ளூர், பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லியா காதர் பாஷா (27). கூலித் தொழிலாளியான இவர், காஞ்சனா என்பவரைப் பெற்றோரின் எதிர்ப்பை மீறி 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

நிறைமாத கர்ப்பிணியான காஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸில் காஞ்சனாவைப் பிரசவத்துக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.


வழியிலேயே காஞ்சனாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததையடுத்து, ஆம்புலன்ஸ் மருத்துவக் குழு உதவியாளர் மதன்ராஜ், வாகன ஓட்டுநர் ஜான் தமிழ்ச் செல்வன் ஆகியோர் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்தனர். அப்போது காஞ்சனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad