பா.ஜ.க வின் 42 ம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

பா.ஜ.க வின் 42 ம் ஆண்டு ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு.

பாரதிய ஜனதா கட்சியின் நாற்பத்தி இரண்டாவது நிறுவன நாளை கொண்டாடும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் திருவேற்காடு நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம்  இன்று காலை ஏழு மணி முதல் தொடங்கி  நடைபெற்றது இந்த முகாமில் சர்க்கரை வியாதி ரத்த அழுத்தம் கண் பார்வை இதயம் சார்ந்த அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.


இம்முகாமில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் ஏராளமான பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் திருவேற்காடு நகர பா.ஜ.க  8 வார்டு சார்பில்  வேலப்பன்சாவடி சந்திப்பில் கோடை வெய்யிலில் பொது மக்களின் தாகத்தை  தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கபட்டது. 


இதில் மாவட்ட பொது செயலாளர் திரு.M.ராஜசிம்ம மகேந்திரா அஷ்வின் அவர்கள் நகர பொறுப்பாளர் திரு S.கணேசன் அவர்கள்  நகர தலைவர் திரு.V..முருகன் அவர்கள் மற்றும் மாவட்ட,  நகர , கிளை பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad