இன்று பாண்டிச்சேரியில் பல்வேறு நிகழ்வில் கலந்துகொள்ள சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது ஆவடி வந்தடைந்தார். CRPF வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க வருகை தரும் உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை வரவேற்க ஆவடியில் 1000 திற்கும் மேற்பட்டோர் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு பிரதமர் மோடி அமீத்ஷா, அண்ணாமலை ஆகியோர் புகைப்படம் அச்சிடப்பட்ட மிக நீல பேனரை வைத்து நின்றுபடி உற்சாக வரவேற்பு ஓபிசி அணி மாநில தலைவர் ஜெ லோகநாதன் தலைமையில் மாநில அரசு தொடர்பு பிரிவு தலைவர் பாஸ்கர், மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட பொது செயலாளர்கள் அஸ்வின், கருணாகரன், சீனிவாசன், மாவட்ட செயலாளர் ஆவடி லயன் எஸ்.கே.எஸ். மூர்த்தி ஆகியோர் வரவேற்பு அளித்தனர். ஆவடி அண்ணாசிலை அருகே கூடியிருந்த பாஜகவினரை பார்த்ததும் காரிலிருந்து கைகளை உயர்த்தி அசைத்தபடியும் கீழே இறங்கி முக்கிய நிர்வாகிகள் அளித்த வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுகொண்டு crpf விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க புறப்பட்டார்.
![]() |
விளம்பரம். |
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி CRPF வளாகத்தில் இரவு ஓய்வெடுக்க வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா அவர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
CRPF வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து வருகிறார்.
Crpf வளாகத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சீடி ரவி, மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தற்பொழுது விடைபெற்றனர்.
No comments:
Post a Comment