ஆவடி அருகே 4 கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 April 2022

ஆவடி அருகே 4 கோயில்களில் பூட்டை உடைத்து கொள்ளை.

ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் தனது பணியை முடித்துவிட்டு அவ்வழியாக நேற்று முன்தினம் இரவு வந்தார், அப்போது, விநாயகர் கோயில் பூட்டை மர்ம நபர் உடைத்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். இதனை கண்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். புகாரின்படி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


அதில், வீட்டு வசதி வாரியத்தில் குடியிருக்கும் கல்லூரி மாணவரின் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை நேற்று முன்தினம் இரவு அந்த மர்ம நபர் திருடினார். பின்னர் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு வரும் வழியில் தொடர்ந்து கங்கை அம்மன் கோயில், செல்லாத்தம்மன் கோயில், விநாயகர் கோயில், சிவா விஷ்ணு கோயில் என 4 கோயில்களின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது. மர்ம நபரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad