திருவள்ளுர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை பூந்தமல்லி பகுதிக்கு சென்று வாட்டர் சர்வீஸ் செய்து கொ8ண்டு ஆவடிக்கு வந்து கொண்டிருந்தார், அப்போது ஆவடி பஸ் நிலையம் எதிரே சி.டி.எச் சாலையில் வரும்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து பதறிப்போன கிருஷ்ணமூர்த்தி உடனடியாக மோட்டார் சைக்கிளை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி தூரமாக ஓடினார்.இதற்கிடையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டு மோட்டார் சைக்கிள் மளமளவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.பின்னர், அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர், ஆனாலும் தீ தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது.
நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீர் டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டுவந்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
No comments:
Post a Comment