பெரியகாவனம் கள்ளுக்கடை மேடு கிராமங்களில் ரூ 56கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 22 April 2022

பெரியகாவனம் கள்ளுக்கடை மேடு கிராமங்களில் ரூ 56கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்.

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது, இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை வலியுறுத்தினார்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் ரூ.56 கோடி மதிப்பிட்டில் கடந்த 2018ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் காலதாமதமாக நடைபெற்று வந்தது.


இதனால், இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பெரியக்காவனம், கள்ளுக்கடை மேடு ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதில், தமிழ்நாடு வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.


பாதாள சாக்கடை திட்ட பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். நகராட்சி முழுமைக்கும் அனைத்து 27 வார்டுகளுக்கும் இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 


பணிகள் தரமாக நடைபெறுவதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கலெக்டர் ஆல்ஃபி ஜான் வர்கீஸ் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, பொன்னேரி நகராட்சி ஆணையர் தனலட்சுமி மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad