தூய்மை இந்தியா திட்டத்தின் பாரதி நகரில் உள்ள பூங்காவை சுத்தம் செய்த பாஜகவினர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 April 2022

தூய்மை இந்தியா திட்டத்தின் பாரதி நகரில் உள்ள பூங்காவை சுத்தம் செய்த பாஜகவினர்.

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபனத் தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவு திட்டமான ஒரு பகுதியாக, திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காடு மண்டல் சார்பில் பாரதி நகரில் உள்ள பூங்காவில்  குப்பைகளை  அகற்றி தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது.  திருவள்ளூர் மேற்கு மாவட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் பொறுப்பாளரும் மாவட்ட செயலாளருமாகிய ஆவடி லயன் டாக்டர் எஸ்.கே.எஸ். மூர்த்தி அவர்கள் தலைமையில், மாவட்ட பொது செயலாளர் அஸ்வின் அவர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு தலைவர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சந்திரசேகரன், மாவட்ட அமைப்புசாரா துனைத் தலைவர் லெனின், திருவேற்காடு நகர தலைவர் முருகன், நகர துணைத் தலைவர் ஸ்ரீதர், நகர தொழில் பிரிவு தலைவர் ஆனந்தன், நகர அரசு தொடர்புப் பிரிவு தலைவர் கண்ணன், நகர பொருளாளர் லட்சுமணன், நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் சாய் சுரேஷ், அரசு தொடர்பு நகர துணைத்தலைவர் கணபதி, அரசு தொடர்பு செயலாளர் முருகன், ஓபிசி அணி நகர துணை செயலாளர் கபிலன், நகர மருத்துவர் அணி தலைவர் பாபு, நகர இளைஞரணி செயலாளர் விஜய், நகர அமைப்பு சாரா தலைவர் ஜி.கே. குமார், நகர இளைஞரணி பொது செயலாளர் மோகன் மற்றும் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad