அப்போது, அங்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் குட்கா பொருட்கள் இருந்தது மொத்தம் 200 கிலோ. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(48) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், பழைய இரும்பு பொருட்களை வாங்கி சேமித்து வைப்பதற்காக தனியாக இரும்பு குடோன் வைத்துள்ளார். அதற்குள் குட்காவை மறைத்து வைத்து திருவேற்காடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
திருவேற்காடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஆவடி போதைபொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன்படி ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 2 மணியளவில் திருவேற்காடு திருவேங்கடம் நகர் பகுதியில் உள்ள இரும்பு குடோனில் சோதனை செய்தனர்.
No comments:
Post a Comment