நிலம் அளவையிட ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட சர்வயேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைைம குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது, ஆவடி அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(62). இவர் கடந்த 2019ம் ஆண்டு தனக்கு சொந்தமான திருமுல்லைவாயலில் உள்ள நிலத்தை அளக்க அம்பத்தூர் தாலுகா சர்வேயர் ஆறுமுகத்தை அணுகியுள்ளார். அப்போது, அவரிடம் நிலத்தை அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ்குமார் இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, அவர்கள் அளித்த ஆலோசனையின்படி ராஜேஷ்குமார், ஆறுமுகத்திடம் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட தலைைம குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி வேலரசு, குற்றம் நிரூபமானதால் சர்வேயர் ஆறுமுகத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment