பாஜக பிரமுகரின் கார் எரிப்பு: பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 15 April 2022

பாஜக பிரமுகரின் கார் எரிப்பு: பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்.

மதுரவாயலில் பாஜக பிரமுகரின் கார் தீவைத்து எரிப்பு. ஆணும் பெண்ணும் சேர்ந்து காரை கொளுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவர், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளராக உள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது, இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து காரை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. 


இதையடுத்து கட்சி ரீதியாக கார் எரிக்கப்பட்டதா? சமூக விரோதிகளின் செயலா? அல்லது முன்பகை காரணமாக காருக்கு தீ வைத்தனரா என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad