ஆவடி அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாவு தாக்கி 3 பேர் உயிரிழந்து உள்ளனர், திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் இவரது வீட்டில் 10 அடி ஆழமுள்ள குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது.
இதனைச் சுத்தம் செய்வதற்காக பிரேம்குமார் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கி பிரேம்குமார் மயங்கி விழுந்தார், அவரை காப்பாற்ற அவரது மகன் பிரவீன்குமார் அருகிலிருந்த பிரமோத், சாரநாத் ஆகியோர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். இதில் பிரேம்குமார், பிரவீன்குமார், பிரமோத் ஆகிய 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
இதில் சாரநாத் என்பவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment